• Jan 19 2025

கோட் படத்தை அசிங்கப்படுத்தி மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்! அஜித் ரசிகர்கள் இழுத்த வம்பு

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரங்களாக ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் ஆகியோர் காணப்படுகின்றார்கள்.

அதிலும் விஜய் மற்றும் அஜித்திற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுடைய படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின்றன. ரசிகர்களும் தமக்கு இடையே போட்டி போட்டு ஒரு சில சந்தர்ப்பங்களில் கலவரங்களும் ஏற்படுகின்றன.

ஒரு கட்டத்தில் நடிகர் அஜித், தனது ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு எனது படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள். முதலில் உங்களது குடும்பத்தை நன்றாக கவனியுங்கள் என ஒரே அறிக்கையில் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார். தற்போது இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் என்ற ரீதியில் கொடுத்து வருகின்றார்.

அந்த வகையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் தற்போது நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கும்  ரிலீசாக உள்ளது.


அதேபோல விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகின்றது. இந்த படத்தில் விஜய் 2 கேரக்டரில் நடிப்பதாகவும் இதில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள், நடிகர் விஜய்யின் கோட் படத்திற்கு எதிராக போஸ்டர் ஒட்டி உள்ளனர். இது விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளதுடன் கடும் எதிர்ப்புகளுக்கும் உள்ளாகியுள்ளது.

குறித்த போஸ்டரில் கோட் ப்ளாக் பாஸ்டர் ஹிட் எல்லாம் இல்லை. நீ நினைச்சாலும் அமையாது.. மங்காத்தா படம் வெளியாகி  பிளாக்பாஸ்டர் ஹிட் அடிச்சு 13 ஆண்டுகள் ஆகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லாமல் 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் விடாமுயற்சியால் கிடைத்த மாபெரும் வெற்றி.. இந்திய அணிக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப் பார்த்த சமூகவாசிகள் நடிகர்கள் நட்பாய் இருந்தாலும் ரசிகர்கள் இவ்வாறு சண்டையிட்டுக் கொள்வது எப்போது முடிவுக்கு வரப்போகிறது என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

Advertisement