• Dec 23 2024

அம்மாவின் பிறந்தநாள்! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்த புகைப்படம் வைரல்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டுஅவருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலை குடும்பத்தின் வழி வந்தவர். தாத்தா அமர்நாத் ஒரு நடிகர்,  அப்பா ராஜேஷும் நடிகர், அம்மா நாகமணி படங்களில் டான்ஸராக பணியாற்றியுள்ளார் மேலும் அண்ணா மணிகண்டனும் நடிகர் தான். இந்நிலையில் ராஜேஷ் உயிரிழந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நாகமணி தான் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிக் பாஸ் மணிகண்டனை ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.


நடிகை ஐஸ்வர்யாவும் சினிமாவில் நடிக்க தொடங்கி பல படங்களில் கதாநாயகியாக கலக்கி வருகிறார். இந்நிலையில் இன்று தனது அம்மாவின் பிறந்த நாள் முன்னிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்துக்கூறியுள்ளார். மேலும் அதில் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் எடுத்த புகைப்படத்தினையும் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸராகிறேமில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement