• Jan 19 2025

பாக்கியாவுக்கு பேரிடியாய் வந்த புதிய சிக்கல்! கான்ட்ராக்டை திருப்பி கொடுக்க சொன்ன ஈஸ்வரி! கோபிக்கு லாஸ்ட் வார்னிங்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்..

இறுதியாக, பாக்கியா சூப்பர் மாக்கட் அண்ணாச்சியுடன் கடனுக்கு பொருட்கள் தரும்படி பேசிட்டு இருப்பதைப் பார்த்த கோபி பாக்கியாவால் மானம் போகுது, கடன் கேட்கிறா பார்த்தியா என சொல்ல ராதிகா திட்டி விட்டு கோபியை  கூட்டிக் கொண்டு போகின்றார். 

இதை தொடர்ந்து, காருக்குள் வந்து இருந்த ராதிகா மீண்டும் கோபியை திட்ட, இனி பாக்கியா விசயத்துல தல போட்டா நான் கிளம்பி போய்டுவன் என சொல்லி மிரட்டுகிறார். இதற்கு கோபி சரி பேபி நான் இனி அப்படி பண்ண மாட்டன். ஆனா நீ இப்ப எல்லாம் பாக்கியாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுற என சொல்ல, நான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணல அவங்கள அவங்க வழில விடுறன், இதான் உங்களுக்கு கடைசி இனி பாக்கியா விசயத்துல தலபோட்ட தெரியும் என மிரட்டி போகிறார்.


இன்னொரு பக்கம், பொருட்காட்சிக்கு என்ன வித்தியாசமா செய்யலாம் என பாக்கியா வீட்டாருடன் கதைத்துக் கொண்டு இருக்க, குழந்தைகளுக்கு ஏற்ற போல புதுசா சாப்பாடு ஏதும் செய்யலாம் என அமிர்தா சொல்ல, நல்ல ஐடியா என பாக்கியாவும் சொல்கிறார். இனியா நீ சொல்லு என கேக்க, நான் என்ன சின்ன பிள்ளையா என இனியா கேக்க, அந்த நேரத்தில் வந்த செழியன் எல்லார்கிட்டயும் சொல்லுற எனக்கு ஏன்மா ஒன்டுமே சொல்ல இல்ல என வருத்தப்படுகிறார். இனியாவும் ஜெனி அண்ணி இருந்தா நல்லா இருக்கும் என சொல்கிறார்.


இதையடுத்து, பழனிச்சாமியை சந்திக்க சென்ற பாக்கியா, அவரிடம் வாங்கிய பணத்திற்கு செக் கொடுக்கிறார். எனினும் வாங்க மறுக்கிறார் பழனி, இறுதியாக வேறுவழியின்றி வாங்கிக் கொள்கிறார்.

இதை தொடர்ந்து ,பொருட்காட்சிக்கு தேவையான சாமான்களை அங்கு கொண்டு செல்வதற்காக வண்டியில் ஏற்றுகிறார். இதை பார்த்து கோபியும், ஈஸ்வரியும் இவள் திருந்தவே மாட்டா என திட்டிக் கொள்கின்றனர். சாமான்களை ஏற்றிவைக்க செழியனும் வந்து உதவி செய்கிறார். அந்த நேரத்தில் மழையும் வர இப்ப எப்படி சமைக்கிற என செல்வி குழம்பிக் கொள்கிறார். எனினும் எல்லாம் சரியாகிடும் என ஆறுதல் சொல்கிறார் பாக்கியா.


இன்னொரு பக்கம், மழை தொடர்ந்தும் பெய்து கொண்டு இருக்க குழம்பி போய் இருக்கிறார் பாக்கியா.இனியாவும் நாளைக்கு எனக்கு காலேஜ் இல்ல போல அப்படி மழையா இருக்கு என சொல்ல, அந்த இடத்திற்கு வந்த கோபியும் ஈஸ்வரியும் மாரி மாரி திட்டுகின்றனர். நான் அப்பவே சொன்னன் தானே கேட்டியா, சும்மா வீட்டுல இருந்து இருந்தா இப்படி எல்லாம் ஜோசிச்சு இருப்பியா, நீ ஒன்னு பண்ணு நீ வாங்கின ஆர்டர்ர திருப்பி அவன்களிடையே குடுத்துடு என சொல்ல அதிர்ச்சியாக நிற்கிறார் பாக்கியா. இதுதான் இன்று வெளியான எபிசோட்.

Advertisement

Advertisement