• Jan 19 2025

நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா! ரசிகர்களுக்கு சொன்ன ட்வீட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கங்குவா படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தினால் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் நடிகர் சூர்யா. இதையறிந்த ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.  

நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 42. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கிவரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.

வரலாற்று பின்புலத்துடன் உருவாகிவரும் இந்தப் படத்தில் இருவேறு காலகட்டங்களை ஒட்டி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தின் போது நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் நடிகர் சூர்யா.


இதனையடுத்து கங்குவா படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு, சூர்யாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்   சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சூர்யாவுக்கு காயம் என அறிந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் Get well soon Suriya என பதிவிட்டு வந்தனர். 

இதனையடுத்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள சூர்யா, 'தனது நண்பர்கள, அன்பர்கள், அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் Get well soon Suriya என்ற உங்கள் அன்பில் இப்போது நலமாக உணர்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்' எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement