• Mar 12 2025

படம் என்றால் இப்படித்தான் இருக்கணும்....."மர்மர்" படத்தின் திரைவிமர்சனம்!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

ஹேமந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகிய 'மர்மர்' திரைப்படம் திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. அந்தவகையில் மர்மர் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்த பலரும் படத்தின் திரைக்கதை மற்றும் நடிப்பு என அனைத்தும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததாக பாராட்டுகின்றார்கள்.


இன்றைய காலகட்டத்தில், ரசிகர்கள் புதிய அனுபவங்கள் கொண்ட திரைக்கதைகளையே எதிர்பார்க்கிறார்கள். அந்தவகையில் இந்தப் படத்தில் மர்மம், திரில்லர் மற்றும் திகில் ஆகியவை கலந்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் முழுவதும் அதிரடித் திருப்பங்கள் காணப்படுவதாலேயே இந்தப்படம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது என்று படக்குழு தெரிவிக்கின்றது.

மர்மர் படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்போது சிலர் இந்த மாதிரி கதைகளை தான் தமிழ் சினிமா இன்னும் நிறைய பண்ணணும் என்று கூறியுள்ளனர். அத்துடன் படத்தினை ஆரம்பித்த தருணத்திலிருந்தே படத்தில் ஒரு மர்மம் வைக்கப்பட்டிருப்பது படம் முழுவதும் பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது எனச் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement