• Apr 26 2024

உங்களிட்ட பேசுறதற்கே நிறையப் பேர் யோசிக்கிறாங்க... ஏடிகே, தனலட்சுமிக்கு இடையில் வெடித்த புதுச் சர்ச்சை... ப்ரோமோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகளவிலான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமானது.

நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இந்நிகழ்ச்சியானது விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனும் கமலே தொகுத்து வழங்குகின்றார்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதிலும் முதல் ப்ரோமோவின் தொடர்ச்சியாக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சக போட்டியாளர்களை நாமினேட் செய்கின்றார்கள். அந்தவகையில் ADK தனலட்சுமியை தேர்வு செய்து கூறுகின்றார். 

அதாவது "உங்களிட்ட பேசுறதற்கே நிறைய பேர் யோசிப்பது போல் தெரிகின்றது, சில விஷயங்களை சொல்லும் போது டக் என்று கோபப்படுவது போல் தெரிகின்றது. கேப்டன் டாஸ்க் நடைபெறுகின்ற அந்த நேரத்தில் நிறைய பேசி இருந்தோம்" எனக் கூறுகின்றார்.

அதற்கு உடனே மறுப்புத் தெரிவிக்கும் வகையில் தனலட்சுமி பேச ஆரம்பிக்கின்றார். உடனே ADK "இதனால தான் நான் உங்களை நாமினேட் பண்ணுகிறேன்" எனக் கூறுகின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement