• Apr 27 2024

ராபர்ட் மாஸ்டருக்கு பல லட்சங்களை சம்பளமாக வழங்கிய பிக் பாஸ்-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 50 நாட்களை கடந்துள்ளது.பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் எவிக்சன் செய்யப்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.ஏழு வாரங்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.



விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ம் தேதி ஆரம்பமாகியது. முதல் வாரம் 20 நபர்கள், அதன்பின்னர் மைனா நந்தினி என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக் பாஸ் சீசன் 6, இந்த வாரம் 50 நாட்களை கடந்துள்ளது.எனினும்  இதனை செலிப்ரேட் செய்வதற்காக நேற்று பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு கேக் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் எவிக்சனில் மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர் இடையே போட்டி நிலவியது.

சென்ற வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் குயின்ஷி உட்பட சிலர் மணிகண்டனை நாமினேட் செய்து Safe Game விளையாடினர். மேலும் இந்த விளையாட்டு வினையாகிப் போக மணிகண்டனுக்கு கடைசி நேரத்தில் மரண பயத்தை காட்டினார் கமல். ஆனால், எதிர்பார்த்தது போலவே ராபர்ட் மாஸ்டர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். எவிக்சன் அறிவிக்கப்படும் முன்பே, "நான் வீட்டுக்குப் போக தான் ஆசைப்படுறேன், அப்பாவை தேடுது. இதுக்குமேல என்னால விளையாட முடியாதுன்னு" ராபர்ட் மாஸ்டர் ஓப்பனாகவே கூறிவிட்டார்.


இறுதியாக இந்த வார எவிக்சன் ராபர்ட் மாஸ்டர் என கமல் அறிவித்ததும் மகிழ்ச்சியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ராபர்ட் மாஸ்டர்.அத்தோடு  ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ராஜா-ராணி டாஸ்க்கில் வரவேற்பு கொடுத்ததை போல, அவருக்கு வழியனுப்பு விழா நடத்தினர். அப்பா - மகள் உறவில் சிக்கிய குயின்ஷி ராபர்ட் மாஸ்டர் வெளியேறியதால் கண் கலங்கி அழுதார்.அதேபோல், மஹாராணியார் ரச்சிதாவும் ராபர்ட் மாஸ்டரை நினைத்து கண்ணீர் சிந்தினார்.


அத்தோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டரிடம் பேசிய கமல், "உங்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தேன், கடைசி வர போட்டியில் இருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்" எனக் கூறி பயண வீடியோ போட்டு வெளியே அனுப்பினார். அத்தோடு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஆக்டிவாக இருந்த ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவிடம் சரண் அடைந்த பின்னர் பொம்மையாக சும்மாவே இருந்தார்.அத்தோடு  பல டாஸ்குகளில் ஆடியன்ஸில் ஒருவராக பங்கேற்ற ராபர்ட் மாஸ்டருக்கு, மொத்தம் 13 முதல் 14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முன்னதாக ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் தான் ஏற்பாடு செய்துகொடுத்தேன் என வனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement