• Apr 20 2024

திரையுலகில் 13 ஆண்டுகள் நிறைவு செய்த யோகிபாபு- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் தன் யோகிபாபு. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து பிரல்யமானதோடு தற்பொழுது தன் கைவசம் 30 படங்கள் வரை வைத்த்துள்ளார்.இது தவிர சமீபகாலமாக கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் அவரது நடிப்பில் வெளியான தர்ம பிரபு, கூர்கா, மண்டேலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் இவர் 2009ம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி என்னும் திரைப்படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.


இந்நிலையில் நடிகர் யோகி பாபு சினிமாவிற்கு வந்து 13ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி நெகிழ்ச்சி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சினிமாவிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய அமீர் மற்றும் இயக்குநர் சுப்ரமணிய ஆகிய இருவருக்கும் நன்றி. 

அதேபோன்று சினிமாவிற்கு முன்பு 6 ஆண்டுகள் சின்னத்திரையில் பணியாற்றியுள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த ராம்பாலாவிற்கு நன்றி. விரைவில் பிரபாஸ் படத்திலும் நடிக்கவுள்ளேன். திரையுலகில் என்னுடைய வளர்ச்சி காரணமான திரைத்துறையினர், ரசிகர்கள், ஊடகத்தினர் என அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement