• Jan 19 2025

தமிழக வெற்றி கழகத்தின் பந்தக்கால் நாட்டுவிழா... குவிந்த ஏராளமான மக்கள்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் மாபெரும் மாநாடு எதிர்வரும் 27ம் திகதி மிக பிரமாண்டமாக நடைபெறயுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரசிகர்கள் tvk உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து தீவிரமாக செய்து வருகின்றனர்.  


நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகனை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் இன்று காலை அதற்க்கான பந்தக்கால் நாட்டும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 3000 பேருக்கு மேல் கலந்துகொண்டனர். இந்த விடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

 

Advertisement

Advertisement