• Aug 07 2026

ஜெட் வேகத்தில் சென்ற நூறு சாமி … ஆறாவது நாளில் திடீர் சரிவா .?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நூறு சாமி படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி முடிந்ததிலிருந்தே இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. குறிப்பாக பெண்கள் மத்தியில் படம் பெரும் வரவேற்பை பெற்றதால், பலரும் தங்களது குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர்.

செலிபிரிட்டிகளிடமும் கிடைத்த பாராட்டு போலவே பொதுமக்களிடமும் நேர்மறை விமர்சனங்கள் அதிகரித்ததால் படக்குழு ஆரம்பத்தில் பெரும் உற்சாகத்தில் இருந்தது.

இந்த படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களில் படம் வசூலில் குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்தது. அந்த வகையில் முதல் நாளில் சுமார் 69 லட்சம் ரூபாயும், இரண்டாவது நாளில் 1 கோடியே 15 லட்சம் ரூபாயும், மூன்றாவது நாளில் 1 கோடியே 68 லட்சம் ரூபாயும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் அதன் பின்னர் வசூல் நிலைமை எதிர்பாராத விதமாக குறையத் தொடங்கியது. கோடி கணக்கில் இருந்த வசூல், நான்காம் மற்றும் ஐந்தாம் நாட்களில் லட்சங்களாக தள்ளப்பட்டது. குறிப்பாக ஆறாவது நாளான நேற்றைய தினத்தில் படம் வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது.

மொத்தமாக ஆறு நாட்களில் படம் சுமார் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக இணையதள தரவுகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இருந்த வேகமான வரவேற்பு திடீரென குறைந்திருப்பதால் படக்குழு தற்போது சிறிது அதிர்ச்சியிலும் கவலையிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement