• Aug 29 2026

கலெக்டராக ஆசைப்பட்டேன்.. கடைசியில எல்லாமே தலைகீழாக போய்விட்டது.! பிரபல நடிகை பகீர்

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை திவ்யா பாரதி சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த பேட்டியில் அவர் தனது சிறுவயது கனவுகள் மற்றும் வாழ்க்கை குறித்து திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “பள்ளிக்கூடம் படிக்கும் போது நான் கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் என் அம்மா என்னை கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்று நினைத்தார்கள். காலேஜ் முடித்த பிறகு வேலைக்கு செல்லாமல், ஒரு பையனை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகலாம் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் நடிகை ஆக வேண்டும் என்று ஒரு நாளும் நான் நினைத்ததில்லை” என தெரிவித்துள்ளார்.


இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வாழ்க்கையில் திட்டமிட்ட பாதை இல்லாமல், எதிர்பாராத முறையில் சினிமா துறைக்கு வந்த தனது பயணத்தை அவர் இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது நேர்மையான பேச்சை பாராட்டி வருகின்றனர்.

மேலும், சினிமாவில் வாய்ப்பு கிடைத்த விதம், ஆரம்ப கால அனுபவங்கள் மற்றும் குடும்பத்தின் ஆரம்ப எதிர்ப்புகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வெற்றிகரமான நடிகையாக திகழும் அவர், தனது பயணம் முழுவதும் “எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பியது” எனவும் கூறியுள்ளார்.

இந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்தை உருவாக்கி வருகிறது.


Advertisement

Advertisement