• Jan 26 2026

சூர்யாவின் வரலாற்றை மாற்றிய ‘கருப்பு’.. சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்புடன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சூர்யா. அவருடைய வரலாற்று சாதனைகள், நடிப்பு ஆகியவை ரசிகர்களுக்கு என்றும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


சமீபத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கருப்பு’ குறித்து திரை ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். படத்தின் பல முக்கிய தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், ‘கருப்பு’ படத்தின் சாட்டிலைட் உரிமைகள் விற்பனை தொடர்பான தகவல்கள் தற்போது வலைத்தளங்களில் பரவிவருகிறது. வெளியான தகவலின்படி, சாட்டிலைட் உரிமைகளை Zee நிறுவனம் வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இது சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ள படம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், படம் மட்டுமல்ல, சூர்யாவின் பிரபலத்தையும், திரையுலகில் அவருடைய நிலைப்பாட்டையும் மென்மேலும் உயர்த்த முடிகிறது. 

Advertisement

Advertisement