• Mar 13 2026

"டியூட்" படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க வேண்டும்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் இளையராஜா என்ற பெயர் எந்த ரசிகருக்கும் புதிதல்ல. கடந்த பல வருடங்களாக மாபெரும் ஹிட் பாடல்களை வழங்கி, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் தனது இசைத் தனிமையை நிரூபித்தவர். 


ஆனால் சமீபத்தில், அவரது பெயர் மீண்டும் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பழைய பாடல்களையும் இணைத்து பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இளையராஜாவின் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பாடல்கள்,  ‘கருத்த மச்சான்’ , ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ என்பன அவரது அனுமதியின்றி ‘டியூட்’ படத்தில் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந்தார். 

இளையராஜா தனது வலியுறுத்தலின் அடிப்படையில், “எனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவது சட்ட விரோதம்” எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு கொண்டு வந்தது. விசாரணையில் நீதிபதி, “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுவார்?” என்றார். 

இந்த கருத்து வழக்கின் முக்கியமான விடயமாகும். இந்த விசாரணையின் முடிவில் தற்பொழுது நீதிமன்றம் ‘டியூட்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களை நீக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், பாடலை நீக்க 7நாட்கள் அவகாசம் வேண்டும் என்ற பட நிறுவனத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement