• Apr 02 2025

51 வயதில் தாயான பிரபல நடிகை.. என்ன குழந்தை பிறந்தது தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்தான் கேமரூன் டயஸ்.

இவர் மாஸ்க், தி ஹாலிடே, சார்லஸ் ஏஞ்சல்ஸ், நைட் அண்ட் டே போன்ற சூப்பர் ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னைவிட ஆறு வயது குறைவான Benji Madden  என்ற இசைக்கலைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.


இந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த அவர் தற்போது ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அறிவித்துள்ளார் கேமரூன் டயஸ்.

மேலும் தற்போது பிறந்துள்ள தங்களது மகனுக்கு  Cardinal Madden  என்ற பெயரையும் சூட்டி உள்ளதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார். அவருடைய ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement