பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சுகன்யா காந்திமதியைப் பார்த்து கல்யாணம் ஆகி வந்ததில இருந்து நான் அக்காவுக்கும் தம்பிக்கும் குறுக்க போய் நின்றதே இல்ல... ஆனா, அங்க பிரச்சனை முடிஞ்ச பிறகும் அக்கா மருமகன் என்று இவர் அங்க போய் நிற்கிறது எனக்கு சங்கடமா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட முத்துவேல் அதெல்லாம் ஏற்கனவே அவன் கிட்ட பேசிட்டேன் எல்லாம் அளவோட தான் வச்சிருக்கான் என்கிறார்.
பின் சுகன்யா இண்டைக்கு ராத்திரியும் அவர் அங்க போய் தான் நித்திரை கொள்ளப் போறார் என்று சொல்லுறார். அதனை அடுத்து முத்துவேல் பழனியைப் பார்த்து உனக்கு தூங்கிறதுக்கு இடமில்லையா என்று சொல்லிப் பேசுறார். அதுக்கு பழனி அக்கா குடும்பத்தில இயல்பு நிலை திரும்பேல அதுதான் அங்க இருக்கிறன் என்கிறார்.

அதனைத் தொடர்ந்து முத்துவேல் பழனியைப் பார்த்து அளவோட இருக்கச் சொல்லுறார். பின் பழனி எல்லாரும் தூங்கினதுக்கு பிறகு யாருக்கும் தெரியாம கோமதி வீட்ட போறார். அதனை அடுத்து பழனி சரவணனைப் பார்த்து எல்லாம் சரியாகிடும் என்கிறார். அதைக் கேட்ட சரவணன் நடந்த எல்லாத்தையும் எப்புடி மறக்கிறது என்று கேட்கிறார்.
மறுபக்கம் மயில் சரவணனுக்கு போன் எடுக்கிறார். அதைப் பார்த்த சுடர் இப்புடி எல்லாம் செய்யாத கொஞ்ச நாளைக்கு பேசாம இரு என்கிறார். மறுநாள் காலையில கதிர் ராஜியைப் பார்த்து நேற்று நீ ரூமில இருந்தால் மட்டும் ஏதாவது நடந்திருமா என்று சொன்னது ஒரே அசிங்கமா போயிடுச்சு என்கிறார். அந்த நேரம் பார்த்து மீனா வந்ததைப் பார்த்த கதிர் உடனே உள்ள ஓடுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!