• Apr 29 2026

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் 'மறக்குமா நெஞ்சம்' படத்தின் டீஸர் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரக்ஷன்.

இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சியே சிறந்த அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.


இது தவிர கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகினார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

அதேபோல தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய "வேட்டையன்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். 


இந்நிலையில், விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா அவருடன்  இணைந்து "மறக்குமா நெஞ்சம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது அப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

90ஸ் கிட்ஸ் மனதை கவரும்வண்ணம் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை Filia என்டர்டைன்மென்ட்டோடு இணைந்து குவியம் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்தை யோகேந்திரன் இயக்கியுள்ளார். சச்சின் வாரியர் இசையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement

Advertisement