• Apr 27 2024

கோலிவுட்டில் மொத்தமா களமிறங்கும் 7 தமிழ்ப் படங்கள்..! ஆண்ட்ரியாவின் படத்திற்கு ஹவுஸ் புள் ஆகுமா?

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த காலத்தில் ரஜினி, கமல் மற்றும் விஜய் , அஜித் என முன்னணி நடிகர்கள் தங்களது திரைப்படத்தை ஒரே நாளில் வெளியிட்டு தொழில் ரீதியான போட்டியை ஏற்படுத்தி தங்களது மார்கெட்டுகளையும் உயர்த்திக் கொள்வர்கள்.

அதே போன்று அறிமுக நடிகர்களின் திரைப்படங்கள் மற்றும் சிறிய பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் போன்றவை முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாத திகதியை தேடிப்பிடித்து அன்று வெளியிடுவது என்பது வழக்கமான ஒன்றே. 

இந்த நிலையில்,  இன்றைய தினம் பிரித்திவிராஜ் நடித்த 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் வெளியான நிலையில், நாளைய தினம் சுமார் ஏழு தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் நாளை வெளியாகாத நிலையில், அறிமுக இயக்குநர்களின் திரைப்படங்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஏழு திரைப்படங்கள் நாளை ரிலீஸுக்கு தயாராகி உள்ளன.


அந்த பட்டியலின் வரிசையில் விக்னேஷ் கார்த்திக்கின் "ஹாட் ஸ்பாட்", ஆண்ட்ரியாவின் "கா", சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் "தி பாய்ஸ்" இவற்றுடன் இணைந்து "பூமர் அங்கிள்", "இடிமின்னல் காதல்" , "நேற்று இந்த நேரம்" , "வெப்பம் குளிர் மழை"  போன்ற திரைப்படங்கள் அனைத்தும் நாளை வெளியாகின்றன. இந்த படங்கள் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement