• Apr 02 2025

மம்மூட்டியின் கிரீடம் சுக்குநூறாக உடைந்த தருணம்! பொக்கிஷமான 2 ரூபா நோட்டு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என 6 மொழிகளில் கிட்டத்தட்ட 410-க்கும் மேற்பட்ட படங்களில் மம்மூட்டி நடித்துள்ளார். 

ஆரம்பத்தில் வழக்கறிஞராக இருந்து "அனுபவங்கள் பாலிச்சகல்" என்ற திரைப்படத்தின் ஊடாக சினிமா துறைக்கு அறிமுகமானார் மம்மூட்டி.  மலையாள சினிமாவில் இவர் தான் சூப்பர் ஸ்டார்.

நடிகர் மம்மூட்டிக்கு சுருமி மற்றும் துல்கர் சல்மான் என இரு பிள்ளைகளும் உள்ளனர். அதிலும் இவரது மகனான துல்கர் சல்மான் இன்றளவிலும் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.

நடிகர் மம்முட்டி பல புத்தகங்களும் எழுதி வெளியிட்டுள்ளார். அவ்வாறு அவர் எழுதிய புத்தகமான மூன்றாம் பிறை என்ற புத்தகத்தில் சுவாரஸ்யமான  விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 


நான் ஒரு நாள் இரவில் தனியாக காரில் பயணித்தேன். அப்போது ஒருவர் ஒரு துணியை தூக்கி என் கார்மீது போட்டார். நான் இறங்கி பார்த்த பின்பே தெரியும் அது ஒரு பெண்ணின் துணி என்று. ஒரு தந்தை தனது மகளுக்கு பிரசவ வலி வந்ததினால் மருத்துவமனை கொண்டு செல்ல வாகனங்களை நிறுத்தும் போது யாரும் நிறுத்தாமல் சென்றதால் வேறு வழியில்லாமல் இப்படி செய்தார். 

நானும் பின்பு அவர்களை ஏற்றி சென்று மருத்துவ மனையில் அனுமதித்தேன். செல்லும் வழியெல்லாம்  நான் யார் என்பது தெரிந்துதான் என்னோடு வருகிறார்களா? நான் பிரபல நடிகர் என்பது இவர்களுக்கு தெரியுமா?  என்று யோசித்துக் கொண்டே வந்தேன். இறுதியில் நான் வீடு செல்லும் போது அந்த தந்தை என்னை அழைத்து மிக்க நன்றி என்று கூறி 2 ரூபாயை கொடுத்தார். மேலும் அந்த காசில் செல்லும் வழியில் ஏதாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அப்போதுதான் நினைத்தேன் அவருக்கு நான் யார் என்று தெரியவில்லை என்று.


இந்த நிகழ்வின் பின்பே எனக்கு கர்வம் என்ற ஒன்று இல்லாமல் போனது. நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.

சிலநேரங்களில் நாம் செய்யும் சிறிய உதவிகள் கிடைப்பவர்களுக்கு பெரிய உதவியாகக் கூட இருக்கும். அதன் பலனாக பூக்கும் மகிழ்ச்சி பூக்கள் வாழ்க்கை பாதை முழுவதும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார் மம்மூட்டி.

Advertisement

Advertisement