• Dec 25 2024

100 கேமராவை ஏமாற்ற முடியாது! பிக் பாஸ் தர்ஷிகாவை கலாய்த்த சத்யா..!

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8ல் இருந்து வெளியேறிய தர்ஷிகா தான் விஷாலை காதல் செய்வது குறித்து ஓபனாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் காதல் ஜோடிகள் திரிவதும் வெளியே வந்த பின்னர் பிரிவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் ஜோடியாக திரிந்த விஷால் - தர்ஷிகா ஜோடி பற்றி பலரும் பேசினார்கள். சமீபத்திய பேட்டியில் தர்ஷிகா தனது காதல் குறித்து பேசியுள்ளார்.  


சமீபத்திய பேட்டியில் "விஷாலை காதலிக்கிறீர்களா?" என நேரடியாக தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு "விஷால் மீது க்ரஷ் இருக்கிறது, அவரை பிடிக்கும், ஆனால் காதலிக்கவில்லை, என்னோட எண்ணத்தை  அங்கு வெளிப்படுத்தினேன் அவ்ளோத்தான்" என்று வெட்கபட்டுக்கொண்டே கூறினார். அதனை கேட்டு அருகில் இருந்த சந்தியா "அங்க 100 கேமரா இருக்கு அதை ஏமாற்ற முடியாது" என்று சொல்லி கலாய்க்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement