• Dec 25 2024

100 படம் பார்த்து 1 கதை எழுதணும்! தமிழ் படம்-3 அப்டேட் கொடுத்த மிர்ச்சி சிவா..!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சிவா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தமிழ் படம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தமிழ் படம் 3 தொடர்பான முக்கிய அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.


நடிகர் சிவா நடிப்பில் வெளியான நிறைய திரைப்படங்கள் காமெடியாகவும் ரசிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் வெளியான சூது கவ்வும்-2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி இருக்க ஒரு பேட்டியில் தொகுப்பாளர் "நீங்க எந்த படம் நடித்தாலும் எங்களுக்கு தமிழ் படம் மாதிரி ஒன்னு தான் வேணும் தயவு செய்து எடுங்க" என்று கூறினார். அதற்கு சிவா இவ்வாறு பதிலளித்தார். 


அவர் கூறுகையில் " ஏற்கனவே இயக்குநரை மீட் பண்ணி கதைச்சாச்சி, 2 மணித்தியாலம் பேசுனாரு, என்ன பிளான் பண்ணி இருக்கோம்னா 2025ல படம் பண்ணலாம்னு இருக்கோம். ஒரு படம் பண்ணுறது நோர்மல் 100 படம் பார்த்து கதை எழுதுறது கஷ்ட்டம். இந்த வருஷம் நிறைய படம் வந்து இருக்கு அதை வச்சி நிச்சியம் படம் பண்ணுவோம்" என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ரசிகர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்

Advertisement

Advertisement