தமிழ் திரையுலகின் தல அஜித் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷமான நாளாக நேற்றைய தினம் அமைந்திருந்தது. ஏனெனில், அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம், வெளியான காலத்தில் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி, வசூல் ரீதியாக வெற்றியை பெற்றது.

இப்போது, அஜித் ரசிகர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் மங்காத்தாவை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ரீ-ரிலீஸ் வெளியீடு, திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி, முதல் நாளிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்கள், அஜித்தின் அதே ஸ்டைல், ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் கதாபாத்திரத்தின் உச்சமான கேரக்டர் செயல்பாடுகளை அனுபவிக்கும்போது, சமூக வலைத்தளங்களில் படத்தை பாராட்டும் பல பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மங்காத்தா திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, ரசிகர்களின் மனதை இன்னும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் அவர், “The craze for a re-release after 15 years of its original release is just fire… Love you guys. Honoured to be a part of AK50” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 15 வருடங்களுக்கு பிறகு, ரசிகர்கள் படத்தை மீண்டும் திரையரங்குகளில் பார்த்ததில் ஏற்பட்ட உற்சாகம், இசையமைப்பாளரையும் மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
The craze for a re-release after 15 years of its original release is just 🔥🔥🔥 Love you guys. Honoured to be a part of AK50 #Mankatha ♠️ @vp_offl @sunpictures @dhayaalagiri @SonyMusicSouth
Listen News!