• Jan 19 2025

உங்க டைம் முடிஞ்சிட்டு காலி பண்ணுங்க,- அதிகாலையில் ஹொட்டலை விட்டு துரத்தப்பட்ட சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இதில்  தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து மற்றும் சன் டிவியின் நிலா உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை சியமந்தா கிரண்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.43 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.


சமீபத்தில் சியமந்தா கிரண் திருச்சியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருக்கிறார். அங்கு early checkin வேண்டும் என முன்பே அவர் கேட்டிருந்தாராம், ஆனால் அவர் ஹோட்டல் சென்றபோது அது தொடர்பாக பிரச்சனை வந்திருக்கிறது. அதற்கு extra பணம் செலுத்துவது தொடர்பாக தான் சண்டை வந்திருக்கிறது.

அதிகாலை 5.30 மணிக்கு அவர் check-in செய்தாராம். அதன் பின் எப்போது காலி செய்வீர்கள் என தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் கால் செய்து கேட்டுக்கொண்டே இருந்தார்களாம்.அதன் பின் மறுநாள் காலை 5 மணிக்கு ஹோட்டல் மேனேஜர் வந்து அவர்கள் ரூம் கதவை தட்டி 'உங்க டைம் முடிந்துவிட்டது. காலி பண்ணுங்க' என பல முறை பிரச்சனை செய்தாராம் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement