• Oct 02 2026

சிக்மா ரிலீஸுக்கு முன்பே இப்படியா.? லீக்கான பதிவால் மெய்சிலிர்த்த இளசுகள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று, அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்ட நிலையில், நடிகை ஜோதிகா தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

‘சிக்மா’ படத்தின் புரமோஷன் நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ள ஜோதிகா, படத்தின் இயக்குநரை  பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “உங்கள் ‘சிக்மா’ படத்தின் புரமோஷன்களை மகிழ்ச்சியுடன் பார்த்து வருகிறேன். பக்குவமான, இயல்பான இளைஞராக வளர்ந்துள்ளீர்கள். வெற்றிக்கு நீங்கள் முழு தகுதியானவர்” என தெரிவித்துள்ளார்.

மேலும், பெற்றோருக்கு சிறந்த மகனாக இருப்பதையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ள ஜோதிகா, அவரது திரைப்பட ரிலீஸ் சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவின் இந்த வாழ்த்து தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஒரு நடிகையாக மட்டுமின்றி மூத்த திரையுலக நட்சத்திரமாக அவர் வழங்கியுள்ள இந்த பாராட்டு, ‘சிக்மா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்தை காணும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement