தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கவனம் ஈர்த்து வரும் பிரீத்தி முகுந்தன், தனது கதாபாத்திரத் தேர்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து பேசிய அவர், பெரிய ஹீரோக்களுடன் நடிப்பதை விட கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்திற்கே தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரீத்தி முகுந்தன், “என்னை பொறுத்தவரை பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும், பெரிய ஹீரோயின் என்ற இமேஜில் நடிக்க வேண்டும் என்பதெல்லாம் என் ஆசையே கிடையாது. ஒரு படத்தில் நடித்தாலும், அந்த படத்தில் வரும் எனது கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றபடி நான் இமேஜ் பார்த்து நடிப்பது கிடையாது.” எனக் கூறியுள்ளார்.
நடிகையின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, சினிமாவில் கதாநாயகியாக மட்டுமே பார்க்கப்படுவதற்கு பதிலாக, கதாபாத்திரத்தின் தனித்துவத்தையும் அதன் தாக்கத்தையும் முக்கியமாக கருதுவதாக அவர் கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரீத்தி முகுந்தன் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களையும், தனக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புள்ள கதாபாத்திரங்களையும் தேர்வு செய்ய விரும்புவதாக தெரிகிறது. இதனால், அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Listen News!