பிரபல நடிகை ஊர்பி ஜாவேத் தான் அணிந்து கொள்ளும் ஆடைகளின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். இவர் அணியும் ஆடைகளை அவதானிப்பதற்காகவே இவருடைய இன்ஸ்டா பக்கத்தை பல லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றார்கள்.
குறிப்பாக கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து ஆடை தயாரித்து அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார். அவற்றில் சில புகைப்படங்களும் வீடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம். ஆனாலும் தான் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு வித்தியாசம் காட்டி வருகிறார்.
d_i_a
இவர் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு சோசியல் மீடியாவில் ஹார்ட் டாபிக் ஆகவே வலம் வருகின்றார். இவரது ஆடை அலங்காரத்திற்கு பின்னால் மிகப்பெரிய குழு ஒன்றே பணி புரிகின்றதாம்.
அதன்படி இயற்கையான பொருட்கள், செயற்கையான பொருட்கள் என்று எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்தையும் கொண்டு இவர் அணியும் ஆடைகள் சில நேரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பையும் பெற்று இவருக்கு பாராட்டுக்களும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார் ஊர்பி ஜாவேத். அதன்படி அதில் தன்னைச் சுற்றி ஒரு வளையம் ஒன்றை உருவாக்கி நெருப்பு சுடர் எரிவதைப் போல செயற்கையாக ஆடையை அணிந்துள்ளார். தற்போது இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
Listen News!