பிரபல நடிகர் விஜய் தற்போது தனது 69 வது படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.
இன்னொரு பக்கம் தீவிரமாக அரசியலிலும் செயற்பட்டு வருகின்றார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தற்போது இரண்டாவது வருடத்தில் கால் பதித்துள்ளார்.
d_i_a
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்ட நிலையில், அவருக்கு அழுகிய முட்டைகளை அடிக்க ரஜினி ரசிகர்கள் போட்ட மாஸ்டர் பிளான் அம்பலமாகி உள்ளது.
அதாவது முதன் முதலாக விஜய் மக்களை நேரடியாக களத்தில் சந்திக்க முடிவெடுத்து உள்ளார். இதற்கான பயணம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்போது அவரை முட்டைகளால் அடித்து அசிங்கப்படுத்த ரஜினியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது அவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி, விஜய் ஆகியோருக்கு சினிமா துறையிலே ஒரு போட்டி நிலவுகிறது. இருவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, ஆடியோ லாஞ்சில் மாறி மாறி தாக்கி பேசுவார்கள். இவ்வாறான நிலையிலேயே தற்போது விஜய்க்கு எதிராக ரஜினியின் ஆதரவாளர்கள் சதித்திட்டம் போட்டுள்ளனர்.
Listen News!