நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரைக்கு வந்த படம் தான் ஜப்பான். Dream Warrior Pictures தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஜப்பான். இது கார்த்தியின் 25வது திரைப்படமாகும். இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி நடித்திருப்பார் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர்.
அதே போல் ராஜு முருகன் தனது படங்களில் பேசும் அரசியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அதை ஜப்பான் படத்தில் எப்படி அமைத்துள்ளார் என்பதையும் காண காத்திருந்தனர்.
இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த படத்தில் தீர்க்கமுடியாத நோயால் பாதிக்கப்படும் திருடன், அவனை பற்றிய பிளாஷ் பேக், இறுதியில் திருடிய நகைகளை மக்களுக்கு கொடுத்துவிட்டு போலீசில் சரண் அடைகிறான் ஹிரோ. வேற ஒன்றுமே இல்ல இந்த படத்தில்.
கார்த்தி இப்படி பட்ட ஒரு படத்தை தேர்வு செய்து நடித்தது தவறு, கார்த்தியின் திரை வாழ்க்கையில் இது தான் அவருக்கு மிகவும் மோசமான படம் என ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி, இன்று வெளியான ஜப்பான் படம் மொத்தத்தில் சுத்த வேஸ்ட். இந்த படத்தை பாக்குறதுக்கு விஷத்தை குடிச்சிட்டு செத்துடலாம் என படம் பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Listen News!