• Dec 04 2023

நீங்க என்கிட்ட புடிச்சி இருக்குன்னு சொன்னப்போ...! விஸ்ணுவுடன் முற்றிய வாக்குவாதம்! பூர்ணிமா வெளியேறுவாரா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தற்போது  பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறி உள்ள நிலையில், அங்குள்ள போட்டியாளர்கள் யார் மீது வேண்டும் என்றாலும் வழக்கு தொடர்ந்து தங்கள் நீதிக்காக போராட முடியும் என கூறப்பட்டது. இதை தொடந்து போட்டியாளர்களுக்கு இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றது.


இந்த நிலையில், மாயாவை பற்றி பூர்ணிமா தப்பாக கதைத்தார் என விஸ்ணு வழக்கு போட்டார்.இறுதியில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பும் வழங்கப்பட்டது.

தற்போது வெளியான ப்ரோமோவில் இதை காரணம் காட்டி  விஸ்ணுவுடன் சண்டை போடுகிறார் பூர்ணிமா. 

இதேவேளை, இந்த வாரம் நான் வீட்டை விட்டு கிளம்புறன் என மாயா, ஜோவிகாவிடம் பூர்ணிமா பேசிக் கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement