• Feb 01 2026

நான் சினிமாவில் பயணிக்க நீங்கள் தான் காரணம்... எனது சக்தி நீங்கதான்... நடிகை நயன்தாரா பதிவு...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக 20 வருடங்கள் சினிமா உலகில் பயணிக்கும் நடிகை நயன்தாரா இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் பெயரை தக்க வைத்து கொண்டு இருக்கின்றார் . சின்னத்திரை மூலம் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா  மனசினக்கரே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 


இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். செயற்கை முறை மூலம் இரு குழந்தைகளுக்கு தாயுமானார் . சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் அதனை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது. 


எனது ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றியாக மாற்றிய மந்திரம் நீங்கள்தான்  இந்த இரண்டு தசாப்தங்களாக சினிமாவில் உருவான நம்பமுடியாத வெற்றிகளுக்கு காரணம் என்னுடைய ரசிகர்கள் மட்டுமே. எனது பயணத்தை வடிவமைத்து ஊக்கமளிக்கும் சக்தியாக நீங்கள் இருந்ததை கொண்டாடுகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement