• Jan 18 2025

மறைந்த காமெடி நடிகரின் மகன் விஜய் டிவி சீரியலில் கதாநாயகனாக அறிமுகம்! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இழப்பு என்றால் அது காமெடி நடிகர் மயில்சாமியின் மரணம் தான். இவர் சிறந்த நடிகராக மட்டுமின்றி பலருக்கும் உதவி செய்து பார்ப்பவர்கள் கண்ணுக்கு ஒரு கொடை வள்ளலாகவும் விளங்கி இருக்கின்றார்.


நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் (அன்பு, யுவன்) உள்ளனர். மூத்த மகன் அன்பு (அருமை நாயகம்) 'அல்டி' என்ற படத்தில் நடித்தவர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திலும் அன்பு நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி விரைவில் விஜய் டிவி சீரியல் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


அதேபோன்று, அவரின் மகளும் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதன்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'தங்கமகள்' என்ற சீரியலில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளாராம் யுவன் மயில்சாமி.

அவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்த நடிகை அஸ்வினி நடிக்க உள்ளாராம். இந்த சீரியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement