• Jan 19 2025

3 கண்டிஷங்களோடு சாய்ராவை திருமணம் செய்த ARR..! யாரும் அறியாத இன்னொரு பக்கம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லை என்ற வகையில் அடுத்தடுத்து ஒவ்வொரு பிரபலத்தின் பிரச்சினைகளும் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. சமீபத்தில் தான் கங்குவா  படம் வெளியாகி படுவிமர்சனத்திற்கு உள்ளானது. அதன் பின்பு நயன்தாரா தனுஷுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சை ஆனது. தற்போது ஏ. ஆர் ரகுமானின் விவாகரத்து பேசுப் பொருளாக காணப்படுகின்றது.

இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் பிரபல இசை அமைப்பாளராக மட்டுமின்றி சிறந்த மனிதராகவும் திகழ்ந்து வருகின்றார். இவரது சாந்தம், அமைதி, உதவும் மனப்பான்மை என்பவை பலரையும்  கவர்ந்ததொன்றாக காணப்படுகின்றது. இவரது இசைக்கு மட்டுமின்றி இவரது கேரக்டருக்கும் பலரும் ரசிகர்களாக உள்ளார்கள்.

இவ்வாறு பலராலும் விரும்பப்பட்ட ஒரு இசை அமைப்பாளராக ஏ. ஆர் ரகுமான் திகழ்ந்து வருகின்றார். அத்துடன் அவர் அமைக்கும் இசைக்கும் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் காணப்படுகின்றது. 

d_i_a

கிட்டத்தட்ட 29 வருடங்கள் தனது மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த ஏ. ஆர் ரகுமான் விரைவில் தனது முப்பதாவது திருமண ஆண்டை கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக நேற்றைய தினம் ஏ. ஆர் ரகுமானின் மனைவி தான் அவரை விவாகரத்து பெற்று பிரிவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தார். அதன் பின்பு இந்த முடிவு தொடர்பில் ஏ. ஆர் ரகுமானும் தெரிவித்து இருந்தார்  தற்போது இந்த விடயம் வைரலாகின்றது.


இந்த நிலையில், ஏ. ஆர் ரகுமான் திருமணம் செய்ய முன்பு தான் திருமணம் செய்து கொள்ள உள்ள  பெண்ணுக்கு இந்த கண்டிஷன் இருக்க வேண்டும் என்று மூன்று கண்டிஷனை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். தற்பொழுது அவர் தெரிவித்த அந்த மூன்று கண்டிஷனும் என்னவென்று பார்ப்போம்.

அதன்படி, ரகுமானின் தாயார் ரஹ்மானுக்கு பெண் பார்க்க போவதாக சொன்னபோது அவர் போட்ட முதல் கண்டிஷன் அந்தப் பெண் நன்றாக படித்திருக்க வேண்டும். அத்தோடு இசை அறிவு கொஞ்சம் ஆவது இருக்க வேண்டும். இரண்டாவது அந்தப் பெண் அழகாக இருக்க வேண்டும். மூன்றாவது கண்டிஷன் அந்தப் பெண் அனைவரையும் மதிக்கக்கூடிய மரியாதை தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்பதுதான். 

அப்படி ஏ. ஆர் ரகுமான் சொன்ன கண்டிஷங்களோடு அவரின் தாயார் அவருக்காக தேடிப்பிடித்த பெண் தான் சாய்ரா. தற்போது இந்த தகவலும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement