• Jan 19 2025

மைக்கை ஆஃப் பண்ணிட்டு வா பேசலாம் ... செய்தியாளரை சொடக்கு போட்டு கூப்பிட்ட யோகிபாபு!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்த ’போட்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி கேட்ட செய்தியாளரை மைக்கை ஆஃப் பண்ணிட்டு வா பேசிக்கலாம் என்று யோகி பாபு சொடக்கு போட்டு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான ’போட்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த சந்திப்புக்கு யோகி பாபு மிகவும் தாமதமாக வந்ததை அடுத்து செய்தியாளர்கள் மணி கணக்கில் காத்திருந்தனர்.

அப்போது தான் தாமதமாக வந்ததற்கு விளக்கம் அளித்த யோகி பாபு, தான் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருப்பதாகவும், அந்த படத்தின் நாயகிக்கு இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்பதால் அவருடன் நடிக்கும் காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு அவரை அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் ஆகிவிட்டது என்றும் அதனால் தாமதம் ஆகிவிட்டது என்றும் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் ஒரு செய்தியாளர் ’உங்களால் நாங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கிறோம், எங்களுடைய பல வேலைகள் தாமதம் ஆகிவிட்டது’ என்று கூற அப்போது பிஆர்ஓ அதற்கு விளக்கம் அளித்தார். வேண்டுமென்றே யோகி பாபு அவர்கள் தாமதமாக வரவில்லை, எதிர்பாராத விதமாக தாமதம் ஆகிவிட்டது, எனவே மற்ற பெரிய படங்களுக்கு சப்போர்ட் செய்வது போல் இந்த படத்திற்கும் சப்போர்ட் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து மீண்டும் யோகி பாபுவிடம் அந்த செய்தியாளர் கேள்வி கேட்க ’மைக்கை ஆஃப் பண்ணிட்டு உள்ள வா, பேசலாம்’ என்று சொடக்கு போட்டு கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement