• Dec 07 2024

விடாமுயற்சியை த்ரிஷா தான் வில்லியா? செம ட்விஸ்ட் வைத்த மகிழ் திருமேனி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து வெளியான டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதை தொடர்ந்து விடாமுயற்சி படம் தொடர்பான அப்டேட்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் இந்தப் படம் பிரேக்டவுன் என்ற படத்தின் தழுவல் தான் என சமூக வலைத்தள பக்கத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

d_i_a

ஆனாலும் அந்தப் படத்தை அப்படியே எடுக்காமல் கொஞ்சம் வேற மாதிரி திருப்பங்களையும் டிவிஸ்டுகளையும் வைத்து இயக்கியுள்ளார் மகிழ் திருமேனி. இந்த படத்தின் டீசரில் எல்லாமும் உன்னை கைவிடும் போது உன்னை நம்பு என்ற வசனமும் ட்ரெண்டிங்கில் தெறித்து வருகிறது.


இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் திரிஷாவை வில்லியாக வைத்து ஹீரோவிடம் உள்ள பணத்தை பறிக்க த்ரிஷா நாடகம் ஆடுவது போல  கதையை மாற்றி அமைத்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி  உள்ளன.

அதாவது பிரேக் டவுன் படத்தின் தழுவல் போல விடாமுயற்சி படத்தின் கதை இருப்பதனால் அந்தப் படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி த்ரிஷாவை வில்லி ஆக்கியுள்ளாராம் மகிழ் திருமேனி. ஆனாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அத்துடன் திரிஷாவை காப்பாற்றுவதற்காக இந்த படத்தின் கதைக்களம் அமையவும் வாய்ப்புகள் உள்ளதாம் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement