• Mar 09 2026

மறு ஆய்வுக்கு ஒத்திவைக்கப்பட்ட 'ஜனநாயகன்' திரைப்படம்... சோகத்தில் ரசிகர்கள்.!

shali / 3 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது சென்சார் பிரச்சினைகளால் தற்காலிக இடைநிறுத்தத்தில் உள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையின் முக்கியமான படமாகும் இதனைப் பொருத்தவரை, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மிகவும் உயர்ந்துள்ளது.


‘ஜன நாயகன்’ திரைப்படம் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) முன்னிலையில் இன்றைய தினம் (மார்ச் 9) திரையிடப்பட இருந்தது. ஆனால், சென்சார் குழு மேலும் ஆராய்வு தேவையுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், மறு ஆய்வு வட்டாரத்திற்கு இந்த படத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

CBFC இன் மறு ஆய்வுக் குழு இப்படத்தை கவனமாக ஆய்வு செய்து, தேவையான மாற்றங்கள் குறித்து மார்ச் 17ம் தேதி இறுதி பரிசீலனை நடத்தவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement