• Apr 02 2025

நீத்தா அம்பானி இவ்வளவு அழகா ஆடுவாங்களா? மெய்சிலிர்க்கும் பெர்பாமென்ஸ்! வைரலாகும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 2000 பேருக்கு அழைப்பு, 2500 வகைகளில் உணவு, வானில் மிளிர்ந்த ட்ரோன் காட்சி என அமர்க்களமாக நடைபெற்றது ஆனந்த் அம்பானியின் ப்ரி வெட்டிங் விழா.

இவ்வாறு மூன்று நாட்கள் வரை இடம்பெற்ற நட்சத்திர விழாக்களில், கலந்து கொண்ட பிரபலங்களை என்டர்டைமன்ட் செய்வதற்காக நீத்தா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி பல நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்கள். 


இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் ப்ரி வெட்டிங் விழாவின் 3வது நாளில் புனித கீர்த்தனையான விஸ்வம்பரி ஸ்துதிக்கு நீத்தா அம்பானி ஆடிய  வீடியோ ஒன்று தற்போது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


அதாவது, தமது பாரம்பரியத்தைக் கொண்டாடி, தெய்வீகத்தைத் தூண்டும் வகையில், திருமதி நீத்தா அம்பானி, தனது தெய்வத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதப் பாடலான விஸ்வம்பரி ஸ்துதிக்கு ஒரு நடன நிகழ்ச்சியை வழங்கியுள்ளார்.


தற்போது இது தொடர்பிலான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement