• Aug 18 2025

மிஸ்கின் தொடருவாரா?இல்லையா? ‘சூப்பர் சிங்கர்’ படைப்பாக்க குழுவில் கலக்கம்..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநரும் நடிகருமான மிஸ்கின், விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டதுதான் தற்போது சின்னத்திரையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் உணர்ச்சிவசப்பட்டும், நேர்மையாகவும் பேசும் இவர். மேலும் அவரது நடுவர் மதிப்பீடுகள் பாராட்டைப் பெற்றதோடு, சில நேரங்களில் பின்னணி நடனக் கலைஞர்களைப் பாராட்டும் விதம் மற்ற நடுவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகின்றன.


 போட்டியாளர்களை விட பின்தளத்தில் நடனமாடிய ஒரு பெண்மணியின் செயலை மிகவும் உணர்ச்சிகரமாக விவரித்தது, நிகழ்ச்சியின் மைய நோக்கத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பியதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், மிஸ்கின் தொடர்ந்து நடுவராக இருக்க வேண்டுமா என்பது தொடர்பாக நிகழ்ச்சிக் குழு கலந்துரையாடி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் அடையாளமாக இருந்த இசை மற்றும் பாடல் நிகழ்வுகளுக்குள் தாமதம் ஏற்படுவதாகவும், மிஸ்கின் அவர்கள் அதிகமாக நேரம் எடுத்துக்கொள்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இதன் பிறகு நிகழ்ச்சியின் படைப்பாக்க குழு என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உள்ளது. மிஸ்கின் தொடரலாமா? இல்லையா? என்பது இன்னும் ஒரு பெரிய கேள்வியாகவே உள்ளது. என்ற தகவல் வெளியாகி உள்ளன. 

Advertisement

Advertisement