• Mar 15 2025

அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..!

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் 8 இல் கலந்து கொண்டு மிகவும் அருமையாக விளையாடி டைட்டில் வின்னராக மாறிய முத்து குமரன் தமிழ் பற்றினால் அதிகமான ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் ரொம்ப சுறுசுறுப்பாக பல நிகழ்வுகளில் கலந்து வரும் இவர் தற்போது தனது பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றி வருகின்றார். சமீபத்தில் புது வீடிற்கு சென்று பால் காச்சி உள்ளார்.


இந்த நிலையில் தற்போது முத்து அப்பா ஆசைப்பட்டது போல் அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிளை பரிசளித்துள்ளார். அதாவது பிக்போஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ROYAL ENFIELD வழங்கிய அன்பு பரிசு தற்போது அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.இதனை தனது அப்பாவிற்கு பரிசளித்துள்ளார்.


மேலும் தனது பள்ளி கால நிகழ்வுகளினை கவலையுடன் பகிர்ந்து கொண்டதுடன் குறித்த BULLET இல் தனது அப்பாவுடன் ஜாலியாக சுத்தியுள்ளார். குறித்த வீடியோவினை தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்துள்ளார். இப் பதிவிற்கு இவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement