விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சுமார் 2 ஆண்டுகளாக தயாராகி வரும் திரைப்படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படத்தை 7 ஸ்ரீ நிறுவனம் சார்பில் லலித் குமாரும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நயன்தாராவும் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளதோடு அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சீமானும், வில்லனாக எஸ்.ஜே சூர்யாவும் கமிட் ஆகியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
லவ் இன்சுரன்ஸ் கம்பெனி திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனால் அந்த படத்தின் தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்தனர்.
மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டியூடு திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் ரிலீஸுக்கு தயாராகியுள்ளன.
இந்த நிலையில், சற்றுமுன் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் ரிலீஸாகி உள்ளது. அதில் பிரதீப்பின் காமெடியும் எஸ்.ஜே சூர்யாவின் என்ட்ரியும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இதோ வீடியோ...
Listen News!