பாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர், நடிகரான அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் இருந்து முழுமையாக விலகி விட்டதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. பல வருடங்களாக ஹிந்தி திரை உலகில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்து பல்வேறு வெற்றி படங்களை வழங்கிய இவர் தற்போது தனது முழு கவனத்தையும் தென்னிந்திய படங்களுக்கு திருப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் ஒரு திறமைசாலியான இயக்குநராக மட்டுமல்லாது, ஒரு வித்தியாசமான நடிகராகவும் வலம் வந்துள்ளார். இவர் பல சாதனை படங்களின் இயக்குநராகவும் மற்றும் வெற்றிகரமான வெப் தொடர்களின் முக்கிய பங்கு வகிப்பவராகவும் காணப்படுகிறார்.
அதுமட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் தோன்றி ரசிகர்களிடையே பிரபலமானவர். குறிப்பாக, இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பிறகு விடுதலை 2 மற்றும் விஜயின் லியோ படத்திலும் நடித்திருக்கிறார்.
அனுராக் காஷ்யப் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், "நான் இனிமேல் பாலிவுட்டில் நடிக்க விரும்பவில்லை. தென்னிந்திய படங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றன. அதன் மூலம் மட்டுமே நான் என் கலைத்திறனை வெளிப்படுத்தப் போகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த முடிவுக்கு பாலிவுட்டில் நிலவி வரும் அரசியல்மோதல்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், தென்னிந்திய படங்களின் கதைகள் மற்றும் இயக்குநர்களின் படைப்பாற்றல் என்பன முக்கியத்துவம் கொடுப்பதால் தான் அவர் தென்னிந்திய திரையுலகை தேர்ந்தெடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அனுராக் காஷ்யப்பின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே வியப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விடுதலை 2 மற்றும் லியோ படங்களில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவர் இனி நடிக்கவிருக்கும் புதிய படங்கள் எப்படி இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
Listen News!