• Jan 20 2025

விஜய் வாங்கிய அப்பார்ட்மெண்ட்டில் 5 பிரபலங்கள் வீடு இருக்கா? டாய்லெட் மட்டுமே 7 லட்சமாம்!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது 200 கோடி முதல் 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றார்.

நடிகர் விஜய் நீலாங்கரையில் புதிதாக கட்டியுள்ள வீட்டில் வசித்து வருகின்றார். விஜயின் மனைவி சங்கீதா அவரிடம் இருந்து பிரிந்து லண்டனில்  வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும் ஒரு தரப்பினர் தன்னுடைய மகள் திவ்யா ஷாஷாவின் படிப்புக்காகவே சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் விஜய் சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம் பகுதியில் புதிதாக அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் தீயாக பரவி வந்த நிலையில், இதனை பி.ஆர். சுந்தர் என்னும் மார்க்கெட் அனாலிசிஸ்ட் தனது ஹோம் டூரில் தெரிவித்து இருந்தார்.

சமீபத்தில் விஜய் உடன் ரம்பா எடுத்துக் கொண்ட போட்டோஸ் ரம்பாவும் விஜய் வாங்கிய அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கியதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில், குறித்த அப்பார்ட்மெண்டில் வீடு வாங்கியுள்ள ஏனைய  பிரபலங்கள் பற்றியும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நடிகர் திரிஷாவும் அந்த அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கி உள்ளாராம்.

இவரை தொடர்ந்து நடிகர்  துல்கர் சல்மான், ஆர்யா ஆகியாரும் அதே  அப்பார்ட்மெண்டில் தங்களுக்கு தனித்தனி குடியிருப்புகளை வாங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த குடியிருப்பில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் டிசைன் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் டாய்லெட் மட்டுமே சுமார் 7 லட்சம் வரும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர  தியேட்டர், லிப்ட் வசதி, ப்ரைவேட் நீச்சல் குளங்கள், கொண்டு சென்னையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரே அப்பார்ட்மெண்ட் இதுதான் என்று தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement