• Aug 13 2026

இந்தியன் 2 பற்றி ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? விமான நிலையத்தில் தரமான சம்பவம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்றைய தினம் மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.

இதன் போது ரஜினியை காண விமான நிலையத்திற்கு வெளியே  நின்ற செய்தியாளர்கள், இந்தியன் 2 படம் பார்த்தீர்களா? அந்த படம் எப்படி இருக்குது என்று ரஜினியிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கையில், இந்தியன் 2 படம் பார்த்தேன். நன்றாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.


மேலும் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி கேட்க, அது இன்னும் முடிவாகவில்லை டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார்.

வேட்டையன் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் சூர்யாவின் கங்குவா  திரைப்படமும் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருப்பதால் வேட்டையன் சில நேரங்களில் தீபாவளிக்கு தள்ளிப் போகவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement