• Jan 20 2025

ஃப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பும் ராயன்.. ஒன்றுதிரண்ட படக்குழுவினர்! போட்டோஸ் இதோ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் தானே இயக்கி நடித்த படம் தான் ராயன். இந்த படம் தனுஷிற்கு  ஐம்பதாவது படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் செல்வராகவன், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரகாஷ் ராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ராயன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அது மட்டும் இன்றி ராயன் படத்தில் ஃப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.


அதாவது இதுவரையில் உலக அளவில் ராயன் படம் 1.5 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ப்ரீ புக்கிங்கிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வசூலிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது ராயன் பட பிரபலங்கள் ஒன்று சேர்ந்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement