• Jan 18 2025

யார் இந்த க்ரித்தி ஷெட்டி... இவர் சினிமாவிற்குள் வந்தது எப்படித் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. 'உப்பனா' என்ற படம் விஜய்சேதுபதிக்கு தெலுங்கில் எப்படி ஹிட் கொடுத்ததோ அதேபோன்றுதான் இவருக்கும் இப்படம் வேற லெவலில் மக்கள் மத்தியில் பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. ஏனெனில் இப்படத்தில் இவரைத் தவிர வேற யாராலும் நடித்திருக்க முடியாது. இந்தப் படத்தின் மூலமாக பலரது கனவுக் கன்னியாக மாறியவர் தான் க்ரித்தி ஷெட்டி.


இவ்வாறாக ரசிகர்கள் பலரதும் மனதை கொள்ளை கொண்ட க்ரித்தி ஷெட்டியின் நிஜப் பெயர் அத்வைதா. இவர் செப்டெம்பர் 21-ஆம் திகதி 2003 இல் மும்பையில் பிறந்தவர். ஆனால் இவரது சொந்த வீடு கர்நாடகாவில் உள்ள மங்களூரில் இருக்கின்றது. 

இவரின் அப்பா பெயர் கிருஷ்ணா ஷெட்டி. அம்மாவின் பெயர் நிதின் ஷெட்டி. இத்தம்பதியினரின் ஒரே ஒரு செல்லப்பொண்ணு தான் க்ரித்தி ஷெட்டி. இதனால் இவர் நினைத்த எல்லாத்தையுமே அவரின் பெற்றோர்கள் பண்ண சொல்லி சம்மதம் கொடுப்பார்கள். 


சின்ன வயது முதல் டான்ஸ் நன்றாக ஆடக் கூடியவர். அதுமட்டுமல்லாது இவர் சின்ன வயதில் இருந்தே மாடலிங் பண்ணி வருகின்றார். சின்ன வயசாக இருக்கும் போதே இவருக்கு ஒரு விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போதே அவரின் பெற்றோர் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்கள். 

இதனால் தான் நானும் ஒரு நடிகையாக வர வேண்டும் என்ற ஆசை இவருக்குள் வந்தது. அத்தோடு படிப்பிற்கும் முக்கியம் கொடுத்து வருகின்றார். அந்தவகையில் BSC psycologhy ஓபன் யூனிவர்சிட்டி ஒன்றின் படித்து வருகின்றார். 'லைவ் பாய், டைரி மில்க்' உட்படப் பல விளம்பரப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 


சினிமா செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினால் டிராமா ஸ்கூல் ஒன்றில் சேர்ந்து படித்திருக்கின்றார். அங்கு இருக்கும்போதே 'ப்ரீத்தி' என்ற ஒரு டிராமாவில் நடித்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து நிறையத் தியேட்டர்களில் நிறைய பர்வோமென்ஸ் பண்ணத் தொடங்கினார்.

அங்கு தான் இவரை இயக்குநர் ஜெய் அவதானித்து இருக்கின்றார். இந்தப் பிள்ளை சூப்பராக நடிக்குது என்று கூறி இருக்கின்றார். அந்த சமயத்தில் தான் இவர் நடித்த 'சடலமே' என்ற நாடகம் கர்நாடகத்தில் ரொம்ப பேமஸ் ஆனது. இந்த நாடகத்தின் மூலமாகத் தான் இவருக்கு கன்னடத்தில் நடிப்பதற்கான ஒரு பட வாய்ப்பு வந்தது.


அந்தவகையில் 2009 இல் கன்னடத்தில் வெளியான 'ஷரிகம' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இவர் சூப்பராக நடித்திருந்தமையால் இயக்குநர் சுபேந்திரன் அவர்கள் 'அழகர் சாமி' என்ற படத்தின் வாயிலாக இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்றார்.

இருப்பினும் இவர் 'பாண்டிய நாடு' என்ற திரைப்படத்திற்குப் பின்னர் தான் அத்வைதா என்ற தனது பெயரை க்ரித்தி ஷெட்டி என மாற்றிக் கொண்டார். இந்தப் பெயர் இவருக்கு வந்ததைத் தொடர்ந்து இவருக்கு பல வழிகளில் அதிர்ஷ்டமும் வந்து சேர்ந்திருக்கின்றது. அதன் பின்னர் தான் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உருவாகத் தொடங்கியது.

Advertisement

Advertisement