• May 05 2026

பாலிவுட்டில் அறிமுகமாகும் பகத் பாசில்...ஜோடியாகும் பிரபல நடிகை யார்?

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் ஹீரோவாக தனது திரை வாழ்வைத் தொடங்கிய பகத் பாசில், இன்று தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். பல மலையாள படங்களில் ஹீரோவாக வலம் வந்த அவர், 2017ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது.


அதனை தொடர்ந்து, சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது முத்திரையைப் பதித்து, மண்டலத்தை கடந்து பிரபலமானார். மேலும், சமீபத்தில் வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார்.


2014ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்த பகத் பாசில், தற்போது அனைத்து மொழிகளிலும் வில்லனாகவும், ஹீரோவாகவும் கவனம் ஈர்த்துவருகிறார். குறிப்பாக, புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடித்துள்ள அவரது கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்நிலையில், பகத் பாசில் பாலிவுட்டில் தனது அடுத்த படமாக அறிமுகமாக உள்ளார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகி உள்ளது. தகவலின்படி, இம்தியாஸ் அலி இயக்கத்தில் அனிமல் புகழ் நடிகை திரிப்தி டிம்ரியுடன் பகத் ஜோடி சேர இருக்கிறார்.இந்த பாலிவுட் திரைப்படம் பகத்தின் தனித்துவமான நடிப்பை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப்போவதாக கூறப்படுகிறது. இது அவரின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement