நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை கடந்த புதன்கிழமை இரவு 8.13 மணிக்கு திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு, திரைத்துறையிலிருந்தும் வெளித்துறையிலிருந்தும் பல பிரபலங்களை இணைத்த ஒரு பிரம்மாண்டமான விழாவாக அமைந்தது. திரைப்பிரபலங்கள் சிரஞ்சீவி, ராம் சரண், வெங்கடேஷ், ராணா மற்றும் தமிழ் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்திற்கு நாகர்ஜுனா சம்மதம் தெரிவிக்கக் காரணமான அம்சமாக, சோபிதாவின் குடும்ப பின்னணி மற்றும் நாகர்ஜுனாவின் மனைவி அமலாவின் குடும்பப் பின்னணி இடையேயுள்ள ஒற்றுமைகள் குறிப்பிடப்பட்டு வருகின்றன.
அமலாவின் தந்தை கடற்படை அதிகாரி; தாய் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதேபோல், சோபிதாவின் தந்தை வணிக கப்பல் பொறியாளர், தாய் பள்ளி ஆசிரியையாக இருந்து வருகிறார். இரு குடும்பங்களும் கல்வி, கலாச்சாரம் மற்றும் முறையான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளதுடன், உயர்ந்த குடும்பப் பின்னணியை பகிர்ந்து கொள்கின்றன.இந்த ஒற்றுமைகள், சோபிதாவை நாகர்ஜுனா அன்போடு மருமகளாக ஏற்றுக்கொள்ள முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அமலா மற்றும் சோபிதா இருவரும் கலாச்சாரத்தின் மீது அதிக மரியாதை கொண்டவர்கள் என்பதும், அவர்களின் நெருக்கத்தை அதிகரிக்க உதவியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணமக்கள் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரைத்துறையிலும் இவர்களின் திருமண நிகழ்வு ஒரு முக்கியமான தருணமாக மாறியுள்ளது.அக்கினேனி குடும்பம் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் மணமக்கள் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!