தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகக் கருதப்படும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ராக்கெட்டரி. இப்படமானது
தேச துரோகி என தவறாக குற்றம் சுமத்தப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது.
இப்படத்தை மாதவன் தான் இயக்கியுள்ளதோடு நடிகர் சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்திருக்கின்றார். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கூட காட்சிப்படுத்தப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.சூர்யாவை போல நடிகர் ஷாருக்கானும் கேமியோ ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளார்.
ராக்கெட்டரி படத்தை எடுத்து பாராட்டுக்களை குவிக்க வேண்டிய நிலையில், பஞ்சாங்கம் தான் மார்ஸ் செல்ல உதவியது என பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் மாதவன். ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்த நிலையில், அதற்கு மன்னிப்பும் கேட்டு ட்வீட் போட்டிருந்தார். ராக்கெட்டரி படம் வெளியான பிறகு அந்த ட்ரோல் எல்லாம் பாராட்டுக்களாக மாறுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.
நம்பி நாராயணனின் வயோதிக லுக்கிற்காக நீண்ட வெள்ளை முடி மற்றும் வெள்ளை தாடியுடன் நடித்த மாதவன் அந்த கெட்டப்புடன் தனது மனைவியுடன் ரொமான்ட்டிக்காக முத்தம் கொடுப்பது போல மூக்கோடு மூக்குரசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் மாதவன் மனைவிக்கு யாருப்பா முத்தம் கொடுக்கிறான்னே கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தனது மனைவி சரிதாவின் தம்பிக்கு இந்த போட்டோவை முதலில் அனுப்பியதும், அவர் மிரண்டே போய் விட்டார் என்றும் இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக மாதவன் போட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நடிகர் நாசர் வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்-இப்படியா நடிக்கனும்..!
- ஆத்தங்கரை மரமே பாடலில் வந்த பேச்சியம்மாவா இது….அடடடே..எப்படி இருக்கிறாங்க தெரியுமா; இதோ புகைப்படம்..!
- அடடே குன்னூரில் இவ்வளவு பெரிய பங்களா சாத்தியராஜ்ஜுக்கு இருக்கா?….வெளியான புகைப்படம்
- கோபத்தோடு ஈஸ்வரி எடுத்த முடிவு- கோபிக்கு காத்திருக்கும் பெரிய சிக்கல் – இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!