• Jan 19 2025

மனோஜ் கனடா பறக்க ரெடி ஆகிட்டாரு போல ... இன்ஸ்டாவில் வெளியிட்ட கிளுகிளுப்பு வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல்தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்களும் நம்பர் ஒன்னில் காணப்படுகிறது.

சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எடுத்துக்காட்டி அதற்குத் தகுந்த நடிகர்களை உள்ளடக்கி, சிறப்பாக கதையை கொண்டு நகர்கிறது சிறடிக்க ஆசை சீரியல்.

மாமியார் வீட்டுக்குச் செல்லும் மருமகள்கள் பணம் இருந்தால் மதிக்கப்படும் விதமும், பணம் இல்லாத ஏழை வீட்டுப் பெண்ணை கொடுமைப்படுத்தும் விதமும் இந்த சீரியலில் அழகாக எடுத்துக் காட்டப்படுகிறது.

அதிலும் மீனா என்ற கதாபாத்திரம் மிகவும் அமைதியான கதாபாத்திரமாகவும், பாவமாக இருந்தாலும் மாமியார் செய்யும்  கொடுமைகளை வெளி காட்டாமல் குடும்பத்தை சகித்துக் கொண்டு உழைப்பால் முன்னேறும் ஒரு கேரக்டராக காணப்படுகிறது.


அதைப்போல முத்து கேரக்டரும், தனது நண்பர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் இழக்கத் தயாரான ஒரு நபராகவும், தனது மனைவிக்கு பக்க ஆதரவாக இருக்கும் ஒரு கதாபாத்திரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதை வேளை இவர்களுக்கு அடுத்து முக்கியம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக மனோஜ், ரோகினி கதாபாத்திரங்கள் காணப்படுகிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களுமே ஃப்ராடு வேலை பார்த்து சிக்கிக் கொள்ளும் கேரக்டர்கள்.


தற்போது கனடாவில் வேலை கிடைத்து இருப்பதாகவும் அதற்கு 14 லட்சம் வேண்டும் எனவும் மனோஜ் ஒரு பெரிய குண்டொன்றை தூக்கி போட்டுள்ளார். அதை சாக்காக வைத்து வேறு ஒரு வேலையும் ஈடுபடுவதை தவிர்த்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது தலைமுடியை சீராக வடிவமைத்து உற்சாகமாக காணப்படுகிறார். எனவே சிறகடிக்க ஆசை சீரியலில் கனடா செல்வதற்கு மாப்பிள்ளை தயாராகிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement