நடிகர் விஜய் அவரகள் தற்போது நடித்து வரும் கோட் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் யாருக்கு என்பதில் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் இவ்வாறு கூறியுள்ளார்.
பரவலான மக்களுக்குப் பிடித்தமான படங்களா இருந்தால் நல்ல வருமானம் வந்தால் பல விதங்களில் வருமானம் கொடுக்கிறார்கள். பிரிமியம் படம்னா 1 மணி நேரத்துக்கு 6 ரூபாய். 2 மணி நேரம்னா 12 ரூபாய். நெக்ஸ்ட் லெவல் படம்னா 4 ரூபாய். இது எல்லாமே 60 நாள்களுக்குள் வெளியிடணும். இல்லேன்னா அந்த தொகை குறைந்து விடும்.
இவங்க படத்தை மட்டும் தான் ஓடிடி வாங்குவாங்க. இதில் தயாரிப்பாளர் சொல்லும் ரேட் தனக்கு சாதகமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளும். அவர்களைப் பொருத்தவரை அந்தப் படத்திற்குப் புதிய சப்ஸ்கிரைபர்ஸ் எத்தனை பேர் வர்றாங்கங்கறது தான் முக்கியம். அதற்கு அவங்க ஒரு பென்ச்மார்க் வைத்து இருப்பார்கள்.
தயாரிப்பாளர்கள் ஒத்துக்கொண்டால் ஓடிடி தளத்தில் வாங்குவாங்க. அந்த வகையில் கோட் படத்திற்கும் டிமாண்ட் இருக்கு. இவங்க சொல்ற தொகையும், அவங்க கொடுக்குற தொகையும் டேலி ஆகலங்கறது தான் உண்மை. அந்தப் படத்தைப் பொருத்தவரை 2 நிறுவனங்களும் வாங்குவதற்குத் தயாராகத் தான் உள்ளது. அதனால் தான் இன்னும் விற்கப்படாமல் உள்ளது என கூறியுள்ளார்.
Listen News!