• Jan 18 2025

எனக்கே டாப் காம்படிஷனா..? புதிய தளபதியை கலாய்த்த வெங்கட் பிரபு..! பதிலடி கொடுத்த பிரபலம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் யூடியூப் பிரபலமான காத்து கருப்பு கலை ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதற்கான படப்பிடிப்பு நேற்றைய தினம் பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

காத்து கருப்பு கலையை ஹீரோவாக வைத்து இயக்கும் இயக்குனர், கலை தான் அடுத்த தளபதி என ஒரு பேட்டியும் நேற்றைய தினம் கொடுத்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதாவது, 'ரத்த பூமி' என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதற்கு காத்து கருப்பு கலை கமிட்டாகி உள்ளார். இதன்போது ஹீரோவான கலையை  காட்டி இவர்தான் 'அடுத்த தளபதி, ஆக்சன் எல்லாம் பக்கவா பண்ணுவார்' என கலையுடன் இருந்த ஒருவர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அவர் இயக்குனரா என்று கூட சரியா தெரியவில்லை.


அத்துடன் காத்து கருப்பு கலையும், அந்த படத்துல ஒத்த விரல்ல ஓடும் ரயிலை நிப்பாட்டுவது போல நடிச்சிருக்கன். அதுல ஒரு வசனம் எனக்கு ரொம்ப பிடிச்சு போய்ட்டு. அதனால தான் அந்த படத்துக்கு ஓகே சொன்னேன் எனவும் சொல்லியிருந்தார்.

நிலையில், இந்த வீடியோவை பார்த்த வெங்கட் பிரபு, நமக்கு டாப் காம்படிஷன் கொடுப்பாங்க போலயே என பதிவிட்டு அவர்களின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உள்ளார்.


அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் கிரின்ச் காட்சிகளை கலாய்த்து படமெடுத்த இயக்குனர் சி.எஸ் அமுதனையும் டேக் செய்து இருந்தார்.

இதன் போது அதற்கு பதில் அளித்த அமுதன், நாம் இருக்கிற இடத்தை நினைத்து சந்தோஷப்படக்கூடாது. உழைச்சிக்கிட்டே  இருந்தா தான் இவங்களோட காலத்துல இருக்க முடியும் என ரிப்ளை செய்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement