• Apr 17 2026

நன்றி கெட்ட ராஜி.. கோமதிக்கு இந்த செருப்படி தேவை தான்! வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்  ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர் 2. இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் கதிர், நடந்த பிரச்சினைகள் எல்லாத்துக்கும் நீ தான் காரணம், உன்ன கல்யாணம் பண்ணினது தான் காரணம் அப்படி என்று ராஜியை திட்ட, நா உன்ன கல்யாணம் பண்ண சொல்லி கெஞ்சினானா? இல்ல உங்க அம்மா கிட்ட கெஞ்சுனனா என ராஜியும் பதிலடி கொடுக்கிறார்.

இதை வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கோமதி கதவை தட்ட, அவரை உள்ளே இழுத்து கதவை சாத்திய ராஜி, உங்களை யார் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னா என்று  கோமதியிடம் கேட்கிறார்.


அதற்கு கோமதி சாகப் போறேன்னு சொன்ன அதனால தான் அப்படி பண்ணினான் என்று சொல்ல, இப்படி தினம் தினம் சாகிறதுக்கு பதிலா அப்பவே ஒரேடியா செத்துப் போய் இருக்கலாம் என்ன ராஜி சொல்கிறார்.

இதை அடுத்து கதிரின் ஆடைகளை ராஜி மடித்து வைத்துக் கொண்டிருக்க, இதெல்லாம் நீ எதுக்கு இப்ப பண்ணுற, அது எல்லாம் தோச்சு வருஷகணக்காகுது அப்படி என கதிர் சொல்கிறார்.

இறுதியில் கதிருடன் செல்லமாக சண்டை போடுகிறார் ராஜி. இதுதான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement